நடிக்க ஆசைப்பட்டு 500 ரூபாவுடன் வீட்டை விட்டு வந்த பிரபல நடிகை..! – வௌியான பகீர் தகவல்

தோனி படத்தின் மூலம் அறிமுகமாகி பிரபலமானவர் திஷா பதானி.

இவர் தற்போது டைகர் ஷ்ஃபுராவுடன் ஜோடி சேர்ந்து பாகி-2 படத்தில் நடித்துள்ளார்.

இந்த படம் சமீபத்தில் திரைக்கு வந்தது.

மேலும் சுந்தர்.சி இயக்கத்தில் ரூ 400 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள சங்கமித்ரா படத்திலும் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தன்னுடைய ஆரம்ப கால சினிமா வாழ்க்கையை பற்றி பேசியுள்ளார்.

நான் நடிப்பு பின்னணி இல்லாத குடும்பத்தில் பிறந்து நடிக்க ஆசைப்பட்டு கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு வெறும் 500 ரூபாயுடன் மும்பைக்கு தனியாக வந்தேன்.

அந்த காசும் செலவாகி போய் அல்லாடினேன், விளம்பரங்களில் நடித்து சம்பாதித்தேன்.

ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்த நிலையில், பின்னர் என்னை நீக்கி விட்டார்கள், அது தான் எனக்கு பலத்தை கொடுத்தது என கூறியுள்ளார்.