திருமணம் ஓகே.. ஆனால் அதை மட்டும் செய்யமாட்டேன்

நடிகை தீபிகா படுகோன் பல வருடங்களாக நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயம். அவர்கள் இந்த வருட இறுதியில் சுவிட்சர்லாந்தில் திருமணம் செய்துகொள்ளவுள்ளதாகவும் நேற்று செய்தி வெளியானது.

இந்நிலையில் திருமண வாழ்வில் அடிஎடுத்து வைப்பது பற்றி ஒரு பேட்டியில் பேசிய தீபிகா படுகோனே, “திருமணம் என்பது என் வாழ்வில் முக்கியமான விஷயம் தான். திருமணத்திற்கு பிறகு நான் ஒரு working wife or mother ஆக தான் இருப்பேன். சினிமாவில் நடிப்பதை நிறுத்தமாட்டேன். நான் வேலையில்லாமல் வீட்டில் இருந்தால் என்னுடன் இருபவர்களுக்கு தான் பைத்தியம் பிடித்துவிடும்” என கூறியுள்ளார்.

தீபிகா திருமணத்திற்கு பின்னும் நடிப்பார் என்பதால் ரசிகர்கள் தற்போது மகிழ்ச்சியில் உள்ளனர்.