சீரியல் புகழ் நடிகை மஞ்சரியா இது?- புகைப்படம் பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்

உறவுகள், கோலங்கள், அண்ணாமலை சீரியல்கள் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் மஞ்சரி.

இவர் தற்போது கணவருடன் மற்றும் குழந்தையுடன் சிங்கப்பூரில் வசித்து வருகிறார். இதுவரையிலான சினிமா பயணம் குறித்து பேசும்போது அவர், இப்போதும் நடிப்பதை விடவில்லை, இங்கே சீரியலில் நடிச்சிட்டு இருக்கேன். தமிழ் சீரியலில் நடிக்க ஆர்வமா இருக்கேன், ஆனா இப்போது வரைக்கும் வாய்ப்புகள் வரவில்லை.

எனக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறாள், தற்போது 10ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறாள்.

சினிமாவில் தொடர்ந்து நடித்துவருவதால் என் வாழ்க்கையில் எந்த மாற்றமும் தெரியவில்லை. முன்பு குண்டாக இருந்தேன், இப்போது ஒல்லியாகி இருக்கேன், ஹேர் கட் செய்திருக்கேன் என்றார்.

தற்போது மஞ்சரியின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இவரா என்று ஆச்சரியப்பட்டு வருகிறார்கள்.