காதலனை ஹீரோவாக்கும் நயன்தாரா

நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் காதல் ஜோடிகளாக வலம் வருகின்றனர்.

நயன்தாரா நடித்த ‘நானும் ரவுடிதான்’ படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன், அடுத்து சூர்யா நடித்த ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை இயக்கினார்.

இதையடுத்து, சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு வந்தபோது அதை ஏற்கவில்லை.

ஸ்கிரிப்ட் ரெடியாகாததால் அப்படத்தை உடனடியாக இயக்க இயலாது என்று தெரிவித்துவிட்டார்.

அந்த வாய்ப்பை இயக்குனர் எம்.ராஜேஷ் ஏற்றிருக்கிறார்.

இயக்குனராக இருக்கும் விக்னேஷ் சிவனை ஹீரோவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் நயன்தாரா. ஜோடியாக அவரே நடிக்கவும் திட்டமிட்டிருப்பதுடன் தமிழ், தெலுங்கில் சொந்தமாகத் தயாரிக்கவும் எண்ணியுள்ளாராம்.

இப்படத்தின் இயக்குனர் பொறுப்பை விக்னேஷ் சிவனிடமே அளிப்பதா அல்லது வேறு இயக்குனரிடம் ஒப்படைப்பதா என்று இருவரும் ஆலோசித்து வருகின்றனர்.

நிஜவாழ்வில் காதல் ஜோடியாக வலம் வரும் விக்னேஷ் சிவன், நயன்தாரா தற்போது திரையிலும் காதல் ஜோடியாக நடிக்கவிருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.