காதல் மன்னன் படத்தில் நடித்த மானுவா இது?- இப்போ எப்படி இருக்காரு பாருங்களேன், புகைப்படம் உள்ளே

அஜித் நடித்த படங்களில் அவருக்கு சாக்லெட் என்ற இமேஜை கொடுத்த படம் என்றால் காதல் மன்னன் படம் என்று கூறலாம். படத்தின் பாடல்கள் எல்லாம் இப்போதும் கூட பல ரசிகர்களின் பேவரெட்.

அந்த படத்தில் நடித்ததோடு சினிமா பக்கம் வராமல் இருந்தவர் நடிகை மானு. 15 வருடம் கழித்து கடைசியாக 2014ம் ஆண்டு என்ன சத்தம் இந்த நேரம் என்ற படத்தில் நடித்திருந்தார்.

அதன்பிறகு நடிக்காமல் இருந்த அவர் மானு ஆர்ட்ஸ் டிரஸ்ட்டை கடந்த 20 வருடமாக நடத்தி வருகிறாராம். நடன நிகழ்ச்சிகள் நடத்தி அதன்மூலம் வரும் பணத்தை ஆதரவற்ற மாற்றுத்திறனாளிகள் பெற்ற குழந்தைகளுக்கு படிப்பு செலவிற்கு உதவி செய்து வருகிறாராம்.

தற்போது அவரது அழகிய குடும்பத்தின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்