எனக்கு நடந்த அந்த கொடுமைக்கு சிவகார்த்திகேயன் தான் காரணம்- தொகுப்பாளினி பாவனா

குறிப்பிட்ட தொகுப்பாளர்கள் ரசிகர்களுக்கு பிடிப்பது சாதாரணமான விஷயம் தான். ஆனால் ஜோடி தொகுப்பாளர்கள் ரசிகர்களுக்கு பிடிப்பது மிகவும் கஷ்டமான விஷயம். ஆனால் அப்படி நிறைய தொகுப்பாளர்கள் மக்களின் அதிக பாராட்டுக்களை பெற்றிருக்கின்றனர்.

அப்படி சொல்லப்போனால் சிவகார்த்திகேயன்-பாவனா கூட்டணி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தது. இவர்கள் தொகுத்து வழங்கிய ஜோடி No.1 என்ற நிகழ்ச்சி டாப் ரேட்டிங்கில் இருக்கும் நிகழ்ச்சி.

சமீபத்தில் பாவனா ஒரு பேட்டியில், சிவகார்த்திகேயனை போல் டைமிங் காமெடி செய்வது யாராலும் முடியாது. ஆனால் அவர் யாரையும் காயப்படுத்தாத அளவிற்கு அவருடைய காமெடிகள் இருக்கும்.

ஆனால் ஒரே ஒரு விஷயத்துக்கு நான் அவரை குற்றம் கூறுவேன், ஏனெனில் நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போது இருக்கும் என்னுடைய குரல் முடிவில் அப்படியே மாறிவிடும்.

சிரித்து சிரித்து நிகழ்ச்சி முடிவில் என்னுடைய குரல் காமெடியாகிவிடும் என்றார்.