தொகுப்பாளினி டிடியின் நிறைவேறாத ஆசை- அந்த நடிகர் அதை செய்வாரா?

தொகுப்பாளினிகளில் ரசிகர்களால் அதிகம் விரும்பப்பட்டவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் சினிமாவில் இப்போது நிறைய படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

அதேசமயம் சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குகிறார், அண்மையில் கூட எங்கிட்ட மோதாதே என்ற புதிய நிகழ்ச்சியையும் தொடங்கியுள்ளார்.

தற்போது டிடி தனக்கு ஒரு ஆசை இருப்பதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அது என்னவென்றால் இளைய தளபதி விஜய்யுடன் நடனம் ஆட வேண்டும் என்பது அவரது நீண்ட நாள் ஆசையாம். அவரை சந்தித்தால் கண்டிப்பாக இதை செய்ய கேட்பேன் என்று பேசியுள்ளார்.