அவருடன் நான் தவறாக நடந்துகொண்டேனா? பிரபல நடிகருக்கு சாய் பல்லவி பதிலடி!!

விஜய் இயக்கத்தில் நடிகை சாய் பல்லவி தமிழில் அறிமுகமாகும் படம் கரு.

இப்பொழுது இப்படத்திற்கு ”தியா” என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பின் போது, சாய் பல்லவி தன்னிடம் மோசமாக நடந்துகொண்டதாக கதாநாயகன் ”நாக ஷவுரியா” முன்பு ஒருமுறை கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

இது பற்றி சாய் பல்லவி பல கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

நாக ஷவுரியா எப்போதும் அமைதியாக தான் இருப்பார். நான் எப்போதுமே அதற்கு எதிர்மறை . அவர் அளித்த பேட்டியை பார்த்த பிறகு இயக்குனரை தொடர்பு கொண்டு கேட்டேன்.

அவர் இதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாதே என்று கூறினார்.

நாக ஷவுரியாவை நான் என்னை அறியாமல் புண்படுத்தியிருக்கலாம். அது எப்படி நடந்தது என்று எனக்கு தெரியவில்லை.

மேலும் அவர் யாருடனும் அதிகம் பழகமாட்டார், அதனால் நானும் அவரின் விஷயங்களில் தலையிடாமல் ஒதுங்கிவிடுவேன்.

நான் தவறாக நடந்ததாக அவர் கூறியது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது என சாய் பல்லவி கூறியுள்ளார்.