சினிமா கற்றுத் தந்த விஷயங்களைப் பற்றிப் பேசிய தமன்னா!

தமன்னாவுக்கு இந்த வருடத்தில் அதிக படங்கள் கைவசம் உள்ளன.

கடந்த வருடம் பாகுபலி படம் அவருக்கு பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது.

இந்த நிலையில் தனது சினிமா வாழ்க்கையினைப் பற்றி, நடிகை தமன்னா சில கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

சினிமா ஒரு கல்லூரி மாதிரி. தினமும் நிறைய விஷங்களை கற்றுக் கொடுக்கும். அதே போல எனக்கும் சினிமா பல விஷயங்களை சினிமா கற்றுத் தந்தது.

பல வலிகளையும்,சவால்களையும் சமாளித்து பயணிப்பதே சினிமா என நடிகை தமன்னா கூறியுள்ளார்.