செல்வராகவனின் கதையில் 2-வது முறையாக நடிக்கிறேன்

சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கி வரும் படம் என்ஜிகே. இந்த படத்தில் ரகுல் பிரீத் சிங், சாய் பல்லவி இருவரும் நாயகிகளாக நடிக்கின்றனர். மேலும், இந்த படத்தில் தனது கேரக்டர் பற்றி பெருமையாக சொல்கிறார் ரகுல்பிரீத்சிங்.

அது என்னவென்றால், நான் தென்னிந்திய மொழிப்படங்கள் மட்டுமின்றி இந்தி சினிமா வரை நடித்து விட்டேன். ஆனால், இந்த என்ஜிகே படத்தில் நான் இதுவரை நடிக்காத ஒரு மாறுபட்ட வேடம். எனது நடிப்புத் திறமையை இந்த படத்தில் வெளிச்சம் போடுகிறார் செல்வராகவன் என்று கூறியுள்ளார்.

மேலும், நான் கன்னட சினிமாவில்தான் அறிமுகமானேன். அப்போது தமிழில் செல்வராகவன் இயக்கிய 7ஜி ரெயின்போ காலனி என்ற படத்தின் ரீமேக்கான கில்லி என்ற கன்னட படத்தில்தான் நடித்தேன். ஆக, சினிமாவில் நான் அறிமுகமானதே செல்வராகவன் கதையில்தான். இப்போது இரண்டாவதாக அவரது கதையில் நடிக்கிறேன் என்கிறார் ரகுல்பிரீத் சிங்.