இசைத் திருவிழாவில் காதலருடன் நயன்தாரா

கலிபோர்னியாவில் ஆண்டு தோறும் பிரமாண்ட இசைத் திருவிழா நடக்கும், இதில் உலகம் முழுவதிலிமிருந்து இசை கலைஞர்கள் கலந்து கொள்வார்கள். கலிபோர்னியா இசை விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்பது ஒவ்வொரு இசை கலைஞர்களின் கனவாக இருக்கும். ஏ.ஆர்.ரகுமான் வருடம்தோறும் இந்த நிகழ்ச்சிக்கு சென்று விடுவார்.

இந்த ஆண்டு இசை நிகழ்ச்சி தற்போது நடந்து வருகிறது. அதில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும், அவரது காதலரும், இயக்குனருமான விக்னேஷ் சிவனும் கலந்து கொண்டிருக்கிறார்கள். காதலர்கள் உலகத்தை சுற்றுவதை குறிக்கோளாக கொண்டு நேரம் கிடைக்கும்போதெல்லாம் பறந்து விடுகிறார்கள். கிறிஸ்துமசை இத்தாலியில் கொண்டாடினார்கள். விக்னேஷ் சிவன் பிறந்த நாளை அமெரிக்காவில் கொண்டாடினார்கள். இப்போது கலிபோர்னியா இசைத் திருவிழாவில் இருக்கிறார்கள். இதை முடித்த விட்டு இந்தியா திரும்பும் நயன்தாரா அஜீத்துடன் விஸ்வாசம் படத்தில் நடிக்கிறார்.