மிகப்பெரிய நடிகரின் குடும்பத்துக்கு மருமகளாகும் சுஜா வருணி…

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்போஸ் நிகழ்ச்சி மூலம், மக்கள் மத்தியில் பிரபலமானவர் சுஜா வருணி.

இவர் குறித்த நிகழ்ச்சியில் இருக்கும் போது, ஒருவரை காதலித்து வருவதாக கூறியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது அந்த நபர் யார் என்பது தெரிய வந்துள்ளது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், ராம்குமாரின் மகனுமான சிவாஜி தேவ் என்பவரையே சுஜா காதலித்து வருவதாகவும், விரைவில் இவர்களது திருமணம் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.