இணையத்தைக் கலக்கும் சண்டக்கோழி 2 பட ட்ரெய்லர்..!

லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிக்கும் “சண்டக்கோழி 2” பட ட்ரெய்லர் சற்று முன்னர் வெளியாகி இணையத்தில் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கின்றது.

இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட பிளாக்பஸ்டர் திரைப்படமான ”சண்டக்கோழி” படத்தை விட, ”சண்டக்கோழி 2” படத்தில் மிகக் கடுமையான சண்டைக் காட்சிகளில் நடித்துள்ளார்.

லிங்குசாமி இயக்கும் இந்த படத்தில் ராஜ்கிரண், கீர்த்தி சுரேஷ் மற்றும் வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் முக்கிய கதா பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேலும், யுவன்சங்கர்ராஜா இசையமைத்த இப்படம், மிக விரைவில் உங்கள் பார்வையில்..!