அடுத்தடுத்து வரும், செம போத ஆகாத, செம

ஒரு படத்திற்குப் பெயர் வைக்கும் போதே வேண்டுமென்றே அதே பெயருடன் மேலும் சில வார்த்தைகளைச் சேர்த்து ஏட்டிக்குப் போட்டியாக பெயர் வைப்பார்கள் போலிருக்கிறது. இதில் யார் முதலில் பெயர் வைத்தார்கள் என்று பஞ்சாயத்து செய்தால் கூட தீர்வு வராது.

விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘காளி’ படத்தின் தலைப்புக்கு ஏட்டிக்குப் போட்டியாக ‘கெட்ட பய சார் இந்த காளி’ என்ற பெயரில் ஒரு படம் தயாராகி வெளியாக உள்ளது. அது போலவே ‘செம’ என்ற படத்தின் தலைப்புக்கு ஏட்டிக்குப் போட்டியாக ‘செம போத ஆகாத’ என்றொரு படமும் தயாராகியுள்ளது.

இதில் ‘செம போத ஆகாத’ படம் வரும் 18ம் தேதி வெளியாக உள்ளது. ‘செம’ படம் 25ம் தேதி வெளியாக உள்ளது. இப்படி ஒரே சமயத்தில் அடுத்தடுத்து பெயர்க் குழப்பம் ஏற்படுத்தும்படியான படங்கள் வருவது இரண்டு படங்களுக்குமே நல்லதல்ல. ஒரு படம் ஓடி முடிந்த பின் அடுத்த படத்தை வெளியிடலாம்.

‘செம போத ஆகாத’ படத்தில் அதர்வா மிஷ்டி, அனைகா சோதியும், ‘செம’ படத்தில் ஜி.வி.பிரகாஷ், அர்த்தனா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.