உயிரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்! நடிகர் தனுஷ்

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி போராடிய பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவத்துக்கு பல தரப்பினரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

போராட்டத்தில் 11 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், தனது ஆதங்கத்தை நடிகர் தனுஷ் ட்விட்டரில் வெளிப்படுத்தியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, ‘ஸ்டெர்லைட்டை எதிர்த்து போராடும் மக்களின் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். இப்படி ஒரு சம்பவத்திற்கு காரணமானவர்கள் கண்டிக்கப்பட வேண்டும். தண்டிக்கப்பட வேண்டும் உயிரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.’