ஹீரோவாக தில் இல்ல, ஆனா வில்லனா நடிக்கிறேன்: சதீஷ்!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் காமெடி நடிகர்களில் ஒருவர். இவர் ஹீரோவாக நடிக்க தைரியம் இல்லை, ஆனால் வில்லனாக நடிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போது பல காமெடி நடிகர்கள், ஹீரோவாக களம் இறங்கி வருகின்றனர். ஆனால் நடிகர் சதீஷ் தமிழ்படம் 2-ல் மெயின் வில்லனாக மாறி உள்ளார்.

இதுகுறித்து சதீஷ் கூறுகையில்,‘ நான் அறிமுகம் ஆன படம், தமிழ் படம் பாகம்-1. இதன் இரண்டாம் பாகம் முந்தைய பாகத்தைவிட பல மடங்கு சிரிக்க வைக்கும். இதில் நான் வில்லனாக உயர்வு பெற்றுள்ளேன்.

இந்த படத்தில் நான் 15 கெட்டப்கள் போட்டுள்ளேன். எனக்கு மட்டும் அல்ல சிவாவுக்கும் இந்த படம் பெரிய அங்கீகாரத்தை கொடுக்கும்.’ என்றார்.