த்ரில்லர் படத்தில் பத்மப்ரியா

மலையாள சினிமாவை பொறுத்தவரை கதாநாயகிகளுக்கு வயதாகிவிட்டது என ஒதுக்கும் வேலையெல்லாம் இல்லை. அதனால் தான் மஞ்சு வாரியர், கனிகா, மம்தா மோகன்தாஸ் ஆகியோரெல்லாம் தொடர்ந்து கதாநாயகிகளாக நடிக்க முடிகிறது. அந்தவகையில் நடிகை பத்மபிரியாவையும் மலையாள திரையும் ஒதுக்கிவிட தயாராக இல்லை..

கடந்த வருடம் ஆந்தாலஜி படமாக வெளியான கிராஸ்ரோடு படத்தில் நடித்திருந்த பத்மபிரியா, அதைத்தொடர்ந்து மலையாள இயக்குனர் ராஜாகிருஷ்ணன் இயக்கிய இந்திப்படத்தில் சயீப் அலிகான் ஜோடியாக நடித்திருந்தார். இந்தநிலையில் பி.பத்மகுமார் இயக்கத்தில் க்ரைம் த்ரில்லராக உருவாகும் ஜோசப் எண்ட் ஆப் தி டே என்கிற படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.