சூர்யா-37 படம் பொங்கலுக்கு வெளியீடு

செல்வராகவன் இயக்கத்தில் என்ஜிகே படத்தில் நடித்துள்ளார் சூர்யா. இதையடுத்து சூர்யாவின் 37வது படத்தை கே.வி.ஆனந்த் இயக்குகிறார். இந்த படத்தில் சூர்யாவுடன் மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

மேலும், தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் வெளியாக உள்ள இந்த படம் ரூ. 100 கோடி பட்ஜெட்டில் தயாராகிறது. ஜூன் 23-ந்தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கி அதையடுத்து இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா, பிரேசில் உள்பட 10 நாடுகளில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

சூர்யா நடித்துள்ள என்ஜிகே படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வரும் நிலையில், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கும் அவரது இந்த 37வது படத்தை வருகிற பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.