இதான் காலா கதையா? டுவிட்டரில் வெளியிட்ட தியேட்டர்!

 ரஜினி நடித்த காலா படத்தின் கதையை அமெரிக்க தியேட்டர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த படம் காலா. இந்த படம் வரும் வியாழன் அன்று உலகம் முழுதும் வெளியாகவுள்ளது. அமெரிக்காவில் இப்படம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், அங்கு காலா ரிலீசாகும் தியேட்டர்களில் சினிமார்க் தியேட்டர் தனது டுவிட்டர் பக்கத்தில் விளம்பரம் வெளியிட்டுள்ளது. அதில், ‘ரஜினிகாந்த் படம் காலா. குழந்தையாக திருநெல்வேலியில் இருந்து மும்பைக்கு சென்ற சிறுவன், தாராவி பகுதியில் டான் ஆகிறார்.மக்களுக்காக போராடுகிறார். இப்படத்தைப் பார்க்க வாருங்கள்’ என அதில் குறிப்பிட்டுள்ளது.

 இந்திய படத்தின் கதைச் சுருக்கம் திரையரங்கின் சமூகவலைதளப் பக்கத்தில் வெளியாவது முதல் முறை என கூறப்படுகிறது.


a