‘நான் சாமி இல்ல..பூதம்..!’ : வெளியானது விக்ரமின் ‘சாமி ஸ்கொயர்’ ட்ரைலர்

ஹரி இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ‘சாமி ஸ்கொயர்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரைலர் வெளியாகியுள்ளது.

தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் சிபு தமீன்ஸ் தயாரிக்கும் படம் ‘சாமி ஸ்கொயர்’. ஹரி இயக்கும் இந்தப் படத்தில் விக்ரம் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், வில்லனாக பாபி சிம்ஹாவும் நடிக்கின்றனர். பிரபு, ஜான் விஜய், ஓ. ஏ.கே.சுந்தர், சூரி, சஞ்சீவ், இமான் அண்ணாச்சி, உமா ரியாஸ் கான் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.  தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்தப் படம் வருகிற அக்டோபரில் ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது.

தூத்துக்குடி கலவரத்தால் அப்பாவி மக்கள் உயிரிழந்த நிலையில், படத்தின் டிரைலர் ரிலீஸை படக்குழு தள்ளி வைத்தது. அதன்படி இன்று காலை 11 மணிக்கு படத்தின் டிரைலர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

இயக்குனர் ஹரியின் வழக்கமான ஸ்டைலில் படத்தின் டிரைலர் ‘கட்’ செய்யப்பட்டுள்ளது.

இதில் விக்ரம் பேசும் வசனமான, ‘நான் தாய் வயத்தில பொறக்கல… பேய் வயத்தில பொறந்தேன். நான் சாமி இல்ல… பூதம்’ என்ற வசனங்கள் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை உருவாக்கியுள்ளது.