கவர்ச்சியில் குதித்தார் கஸ்தூரி

ஒரு காலத்தில் குடும்ப பாங்கான கேரக்டரில் நடித்தவர் கஸ்தூரி, திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டிலானவர் மீண்டும் திரும்பி வந்தார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், அக்கா அண்ணி வேடங்களில் நடித்தார். டுவிட்டர் பேஸ்புக்கில் பரபரப்பான கருத்துக்களை கூறி வந்தார். சில சிறு பட்ஜெட் படங்களில் ஒரு பாடலுக்கு ஆடவும் செய்தார். தற்போது தமிழ் படம் 2.ஓ படத்தில் ஒரு பாட்டுக்கு கவர்ச்சி நடனம் ஆடியிருக்கிறார்.

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘தமிழ்ப்படம் 2.0’. 2010-ம் ஆண்டு வெளியான ‘தமிழ்ப்படம்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம். ‘மிர்ச்சி’ சிவா ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில் திஷா பாண்டே மற்றும் ஐஸ்வர்யா மேனன் என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். சதீஷ், சந்தானபாரதி, மனோபாலா, நிழல்கள் ரவி, சேத்தன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

‘ஒய் நாட் ஸ்டுடியோஸ்’ சார்பில் சஷிகாந்த் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்ய, கண்ணன் இசையமைத்துள்ளார். வருகிற ஜூலை மாதம் இந்தப் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

இதில், ஒரு குத்துப்பாட்டுக்கு நடனமாடியிருக்கிறார் கஸ்தூரி. ‘வா வா காமா… இங்கு யார்தான் ராமா?’ என்று அந்தப் பாடல் தொடங்குகிறது. அந்தப் பாடலில், கஸ்தூரியுடன் சேர்ந்து சிவா, சேத்தன் உள்ளிட்டோரும் ஆடியுள்ளனர். தொடர்ந்து ஒரு பாடலுக்கு ஆட தயாராக இருக்கிறாராம் கஸ்தூரி.