மீண்டும் திரையில் போக்கிரி

2007-ம் ஆண்டு பிரபுதேவா இயக்கத்தில் விஜய், அசின், பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடித்த படம் போக்கிரி. விஜய்யின் சூப்பர் ஹிட் பட பட்டியலில் இடம் பிடித்த இந்த படம் அப்போதே ரூ.75 கோடி வசூலித்தது.

இந்நிலையில், விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22-ந்தேதி இந்த படத்தை மீண்டும் வெளியிடுகிறார்கள். 11 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகும் விஜய்யின் போக்கிரியை அவரது ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறார்கள்.