தளபதி விஜய் மகனின் வைரலாகும் வீடியோ உள்ளே

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய்க்கு சஞ்சய், ஷாசா என இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர்களில் மூத்தவரான சஞ்சய் சென்னையில் இருக்கும் ‘அமெரிக்கன் இன்டர்நேசனல் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்தாண்டு பள்ளிப்படிப்பை முடித்துள்ள அவர், பட்டம் பெரும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

விஜய்யின் வேட்டைக்காரன் திரைப்படத்தில், குட்டிப் பையனாக தோன்றி இருந்த சஞ்சய் இன்று, அவரது தந்தையின் உயரத்துக்கு வளர்ந்து விட்டார்.

இடையிடையே அவரது ஒளிப்படங்கள் வெளியாகி பிரபலமாகும் நிலையில், அவர் பள்ளிப்படிப்பை முடித்து பட்டம் பெறும் காணொளியும் தற்பொழுது பிரபலமாகி வருகிறது.

குறிப்பிட்ட வீடியோவில் சகோதரர் சஞ்சய் உடன், விஜய்யின் மகள் ஷாசாவும் உ்ளளார். 12 வயதான ஷாசவும் அதே பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

சில நாள்களுக்கு முன் அவர் கலந்துகொண்ட விளையாட்டு போட்டியைப் பார்க்க, நடிகர் விஜய் சென்றிருந்த ஒளிப்படங்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.