‘கடைக்குட்டி சிங்கம்’ பாடல்கள் 11 ம் தேதி

பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம் ‘கடைக்குட்டி சிங்கம்’. சூர்யாவின் ‘2D ENTERTAINMENT’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில், சாயிஷா, ப்ரியா பவானி சங்கர், அர்த்தனா பினு மூவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

கார்த்தியின் அப்பாவாக சத்யராஜ் நடித்துள்ளார். கடைக்குட்டி சிங்கம் படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியான நிலையில் இப்படத்தின் பாடல்கள் வருகிற 11-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. கார்த்தி நடிக்கும் படத்துக்கு முதன் முதலாக டி.இமான் இசையமைத்துள்ளார்.

கடைக்குட்டி சிங்கம் விவசாயம் மற்றும் விவசாயிகளின் பிரச்சனைகள் பற்றி பேச வரும் படம் என்று சொல்லப்படும் நிலையில், இந்த தகவலை பாண்டிராஜ் மறுத்திருக்கிறார். கார்த்தி இந்தப் படத்தில் விவசாயியாக நடித்துள்ளார் என்பது உண்மைதான் ஆனால் இது விவசாயம் பற்றிய படமில்லை, பேமிலி செண்ட்டிமெண்ட் படம் என்கிறார்.