நகைச்சுவை கலந்த வேடத்தில் சூர்யா

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 37வது படத்தில் மோகன்லால், அல்லு சிரிஷ், ஆர்யா, சாயிஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியது. அங்கு படமாக்க வேண்டிய காட்சியை தற்போது படமாக்கி முடித்து விட்ட கே.வி.ஆனந்த், அடுத்தபடியாக பொள்ளாச்சியில் அடுத்தகட்ட படப்பிடிப்பை நடத்துகிறார். இந்த படத்தில் சூர்யா நகைச்சுவை கலந்த வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.