ராஜா ராணி செம்பா ஐ கலாய்த்த நெட்டிசன்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலில் செம்பா என்ற நாயகி வேடத்தில் நடித்து வருபவர் ஆலியா மானசா. சினிமாவில் ஜூலியும் நான்கு பேரும் -என்ற படத்தில் நாயகியாக அறிமுகமான இவருக்கு அந்த படம் வெற்றியாக அமையவில்லை. ஆனால் இந்த சீரியல் அவரை பிரபலப்படுத்தி விட்டது.

குறிப்பாக, ராஜா ராணி சீரியலில் நடித்துள்ள செம்பா கேரக்டர் இவருக்கு ஏராளமான ரசிகர்களை உருவாக்கிக் கொடுத்துள்ளது. இந்த நிலையில், தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வித் அவுட் மேக்கப் என்று சொல்லி தனது போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதைப்பார்த்து பலரும் அவரது அழகை வர்ணித்து வருகிறார்கள்.

ஆனபோதும் சிலர், பொட்டு, லிப்ஸ்டிக், ஐலாஸ் எல்லாம் போட்டிருக்கீங்க. இதெல்லாம் மேக்கப் இல்லையா? வித் அவுட் மேக்கப் என்றால் செயற்கை அரிதாரம் எதுவுமே முகத்தில் இருக்கக்கூடாது என்று அவரை கிண்டல் செய்து கமெண்ட் கொடுத்துள்ளனர்.