தசாவதாரத்தை மிஞ்சிய சதீஷ்

கிரேஸி மோகனின் நாடக குழுவில் நடித்துக் கொண்டிருந்தவர் சதீஷ். அதன் பிறகு சின்னத்திரையில் காமெடி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தார். ஏ.எல்.விஜய் இயக்கிய பொய் சொல்லப்போறோம் படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்தார். அதன் பிறகு பல படங்களில் காமெடியனாக நடித்தார். பாண்டிராஜ் இயக்கிய மெரீனா படத்தில் ஹீரோவாக நடிக்க தேர்வானவர் இவர்தான். கடைசி நேரத்தில் இவர் மாற்றப்பட்டு சிவகார்த்திகேயன் ஹீரோவானார். இவர் ஹீரோவின் நண்பர் ஆனார். அன்று முதல் இருவரும் நிஜத்திலும் நண்பர்கள் ஆனார்கள்.

இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தபோதும் சதீசுக்கு தனித்த அடையாளம் கிடைக்கவில்லை. வசனம் பேசுகிறார், பாடி லாங்குவேஜ் இல்லை என்ற விமர்சனம் வைக்கப்பட்டது. தற்போது வெளிவந்துள்ள தமிழ் படம் 2ம் பாகத்தில் சதீஷ் காமெடி வில்லனாக நடித்துள்ளார். சதீசின் நடிப்பு பற்றி இருவேறு விமர்சனங்கள் இருந்தாலும் ரசிகர்கள் அவரது காமெடி வில்லத்தனத்தை ரசிக்கிறார்கள்.

இது தவிர அவர் படத்தில் 15 கெட்அப்களில் நடித்துள்ளார். அந்நியன், முதல் 2.ஓ வரை எல்லா ஹீரோக்களின் கெட்அப்பையும் போட்டுவிட்டார். இந்தப் படத்திற்கு பிறகு சதீஷ் நடிக்கும் படங்களின் எண்ணிக்கை உயரும். அவர் சீரியஸ் வில்லனாக நடிக்கும் வாய்ப்பும் அமையலாம் என்கிறார்கள்.