அந்நியன் பட நடிகை சதாவுக்கு இப்படி ஒரு நிலைமையா! இந்த மாதிரி வேடங்களில் நடிக்கிறார்!

ஜெயம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சதா. ‘போயா போ’ என்று ரசிகர்களை கவர்ந்தவர் அடுத்ததாக ஷங்கரின் பிரமாண்ட படமான அந்நியனில் நடித்தார்.

அஜித்துடன் கூட நாயகியாக நடித்த இவருக்கு அதன் பிறகு சொல்லிக்கொள்ளும் படியான படங்கள் எதுவும் அமையவில்லை.

தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவில் நடுவராக வந்துகொண்டிருந்தவர் தற்போது டார்ச்லைட் என்ற படத்தில் பாலியல் தொழிலாளியாக நடிக்கிறார்.

இப்படம் நெடுஞ்சாலைகளில் டார்ச் லைட் அடித்து பாலியல் தொழில் செய்யும் பெண்கள் பற்றிய கதையாம். இப்படத்தை விஜய் நடித்த தமிழன் படத்தை இயக்கிய மஜீத் இயக்குகிறார்.