சர்கார் படத்திற்கான டப்பிங் வேலையில் ஆரம்பம்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் சர்கார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்த படத்தின் போஸ்டரில் விஜய் புகை பிடிக்கும் காட்சி வெளியாகி சர்ச்சைகளை சந்தித்து பின்னர் அடங்கியது.

இந்த நிலையில், தற்போது இப்படத்தின் வசன காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் அமெரிக்கா சென்று பாடல் காட்சியை படமாக்குகிறார்கள். அதில் விஜய்-கீர்த்தி சுரேஷ் பங்கேற்கிறார்கள்.

மேலும், நாளை (ஜூலை 23 திங்கள் கிழமை) முதல் சர்கார் படத்தின் டப்பிங் பணிகள் தொடங்குகிறது. முதல்நாளில் விஜய் தனக்கான டப்பிங்கை பேசுவார் என்று அப்படக்குழுவில் சொல்கிறார்கள்.