வில்லத்தனம் கலந்த நெகட்டிவ் கேரக்டரில் விஷால்

தொடர்ந்து தோல்விப்படங்களிலேயே நடித்து வந்த விஷாலுக்கு துப்பறிவாளன், இரும்புத்திரை வெற்றிப்படங்களாக அமைந்தன. தன்னுடைய நடிப்பில் வெளிவந்த இரும்புத்திரை 100 நாட்கள் வெற்றிகரமாக ஓடியதால் உண்மையிலேயே உற்சாகமாக இருக்கிறார் விஷால்.

அதே உற்சகாத்தில், லிங்குசாமி டைரக்ஷனில் நடித்து வந்த சண்டைக்கோழி 2 படத்தின் படப்பிடிப்புகளை முடித்துவிட்டார். இன்னொருபுறம் அடுத்த படத்துக்கு கதை கேட்டு வந்தார். அவர் கேட்ட கதையில், அயோக்யா என்ற கதை பிடித்துப்போனதால் அப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.

லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது. ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்த வெங்கட் மோகன் இப்படத்தை இயக்குகிறார். அயோக்யா படத்தில் சற்றே வில்லத்தனம் கலந்த நெகட்டிவ்வான கேரக்டரில் நடிக்கிறார் விஷால்.