எதுவாக இருந்தாலும் 2 நாள்தான்

தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் நடித்து வருகிறார் அமலாபால். அவரிடம் காதல், கல்யாணம், விவாகரத்து இவற்றில் இருந்து மீண்டு வந்துவிட்டீர்களா? என்று கேட்டால் ´இவற்றால் எந்த பாதிப்பும் இல்லை என்றால் அது சுத்த பொய்.
நமக்கென்று ஒரு கனவை தேர்ந்தெடுத்து அதில் கவனமாக இருந்தால் போதும். எல்லா துறைகளிலும் நீடித்து இருந்து சாதனை செய்தவர்களை பார்த்தால் இது புரியும்.

அதற்காக வருத்தமே படாமல் வாழ முடியாது. எந்த பிரச்சினையாக இருந்தாலும் 2 நாள் துக்கம் அனுபவிச்சுட்டு உடனே வெளியே வந்துவிட வேண்டும். நான் இப்போது முழுக்க சைவத்துக்கு மாறி இருக்கிறேன். இந்த வாழ்க்கை எல்லாவற்றையும் கற்றுக்கொடுக்கும். நமக்கான சரியான பாடத்தை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்´ என்று கூறி உள்ளார்