என் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…

நடிகை மீனா தென்னிந்திய நடிகர்களில் பெரும்பாலனவர்களுடன் ஜோடி சேர்ந்துவிட்டார். அவரிடம் நீங்கள் ஜோடி சேர ஆசைப்பட்டு நிறைவேறாத ஹீரோ யார்? என்று கேட்டதற்கு அரவிந்தசாமிகூட மட்டும்தான் நான் நடிக்கலை.

‘ரோஜா’ படம் ரிலீஸான நேரத்துல அவருக்குப் பெரிய கிரேஸ் இருந்தது. அப்போ அவர்கூட ஒரு படத்துல நடிக்கும் வாய்ப்பு வந்தும், கால்ஷீட் பிரச்சினையால் அது கைகூடலை. ‘மிஸ் பண்ணிட்டோம்’னுதான் இப்போதும் தோணும். விஜய் சார்கூட நிறைய படம் ஹீரோயினா கமிட் ஆகி, நடிக்க முடியாம போயிடுச்சு. ‘தெறி’ பட ஷூட்டிங் டைம்ல, ‘வேணும்னேதானே என்கூட நடிக்காம இருந்தீங்க’னு கேட்டுட்டு, ‘அப்போ உங்க டைரி தெரியும், சும்மா விளையாட்டுக்குக் கேட்டேன்’னு சிரிச்சார்.

அவர்கூட நடிக்காத குறையைப் போக்கவே, ‘ஷாஜகான்’ படத்துல விஜய் சார்கூட ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடினேன். ‘ஃப்ரெண்ட்ஸ்’ (தேவயானி ரோல்), ‘ப்ரியமுடன்’ (கெளசல்யா ரோல்), ‘வாலி’ (சிம்ரன் ரோல்), ‘தேவர் மகன்’ (ரேவதி ரோல்), ‘படையப்பா’ (ரம்யா கிருஷ்ணன் ரோல்), ‘பொன்னுமணி’ (சௌந்தர்யா ரோல்) என்று நான் கதைகேட்டு, நடிக்க முடியாம போன படங்களின் பட்டியல் ரொம்ப நீளம்’ என்று கூறி உள்ளார். வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது பற்றி கேட்டதற்கு ‘ரொம்ப துயரமான வி‌ஷயம்.

எல்லா துறைகள்லயும் பெண்களுக்கு பிரச்னை உண்டு. நான் எதிர்கொள்ளவில்லை என்றாலும், என் காலத்திலேயும் இந்தப் பிரச்சினை இருந்தது. வக்கிர புத்தியுடைய ஆண்கள் திருந்தணும். அவங்க ஒரு பொண்ணுகிட்ட ‘டீல்’ பேசுறதுக்கு முன்னாடி, தங்களுக்கும் மனைவி, மகள் இருக்காங்கனு உணரணும். திறமைக்கான வாய்ப்பை வேறு எந்த சமரசமும் இல்லாமல், பெண்கள் போராடிப் பெறணும்’ என்று பதில் அளித்துள்ளார்..