Published on August 30th, 2018
BIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்

பிக்பாஸ் வீட்டில் வெகுளி என்ற பெயரை பெற்றவர் நடிகர் சென்ராயன். இவர் செய்யும் விஷயங்கள் எல்லாமே கொஞ்சம் சின்ன பிள்ளை தனமாக இருக்கும், ஆனாலும் ரசிகர்கள் அவரை ரசிக்கிறார்கள்.
கடந்த 2 நாட்களாக பிக்பாஸ் பிரபலங்களின் குடும்பத்தினர் வீட்டிற்குள் வந்து செல்கின்றனர். இன்று காலை வந்த புதிய புரொமோவில் சென்ராயன் மனைவி வருகிறார். பின் தான் கர்ப்பமாக இருப்பதை அவர் கூற சென்ராயன் துள்ளி குதித்து கத்துகிறார்.
அவரின் அந்த சந்தோஷத்தை பார்த்த மக்களும் சந்தோஷப்படுகிறார்கள்