இயக்குனரை தன் அழகால் மயக்கிய ஸ்ரேயா…

பெங்களூருவில் மிகுந்த பொருட்செலவில் கலைநயத்துடன் நிர்மாணிக்க பட்ட படப்பிடிப்பு அரங்கத்தில் ஏராளமான துணை நடிகர் நடிகையர் சூழ பிரேம், சுகன்யா, கணேஷ் வெங்கட்ராமன் உள்ளிட் நட்சத்திர பட்டாளம் நடிக்கும் படம் “சந்திரா’. இந்தியன் கிளாசிக் ஆர்ட்ஸ், நரசிம்ம ஆர்ட்ஸ் என்ற நிறுவனங்களும் இணைந்து வழங்கும் “சந்திரா’ படத்தின் மூலம் கணேஷ் வெங்கட்ராமன், பிரேம் ஆகிய இருநாயகர்களும் உச்சநிலைக்கு செல்வார்கள் என்று படபிடிப்பு குழுவினர் நம்பிக்கை தெரிவித்தனர்.

“ஸ்ரேயா எங்களை ஆச்சரிய படுத்துகிறார்.. மயக்குகிறார். அவர் அழகால் மட்டுமின்றி… உழைப்பாலும் தான்” என்கிறார் சந்திரா படத்தின் தயாரிப்பாளர் இயக்குனர் ரூபா ஐயர். இப்படத்தில் நடிக்கும் ஸ்ரேயா படப்பிடிப்பு குழுவினரை மட்டுமின்றி எல்லோரையும் தன்னுடைய திறமை மூலம் கவர்ந்து விட்டார். சிறிதளவும் அயர்ச்சி இன்றி அவர் நடிப்பது எங்களுக்கு உண்மையில் ஆச்சரியம் தான். இவர் ஒரு ஒளிபதிவாளரின் பொக்கிஷம்… எந்த கோணத்தில் படம் எடுத்தாலும் அழகாகவே இருக்கிறார். எந்த ஒரு சவாலையும் எதிர் கொள்கிறார்.. நடிப்பாகட்டும், நடனம் ஆகட்டும்… இவருடன் பணிபுரிவது மிகவும் உற்சாகமானது என்று கூறினார்.

புன்னகையோடு இவரது புகழாரத்தை ஏற்று கொண்ட ஸ்ரேயா சரண் “ரூபா ஐயர் மிகவும் திறமையான இயக்குனர்… இவர் திட்டமிடுவதில் ஒரு நேர்த்தி இருக்கும்… நம்மிடம் வேலை வாங்குவதிலும் சிறிதும் பதட்டம் இன்றி செயல்படுகிறார்.. இப்படத்தில் நான் இளவரசி.. அதை போலவே உணர வைக்கப்படுகிறேன்… ரூபா இந்திய அளவில் பெரிய இயக்குனராக வருவார்’ என்றார்.