வீணா மாலிக்கும், அவரது கணவரும் மரணதண்டனை வழங்குமாறு முஸ்லீம் அமைப்புக்கள் கண்டனம்!

பாகிஸ்தான் நாட்டைச்சேர்ந்தவர் நடிகை வீணா மாலிக். பாலிவுட் படங்களில் நடித்து வந்த இவர், நிர்வாண போஸ் கொடுத்தும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர். இவர் சமீபத்தில் ஆஷாத் பஷீர் கான் என்பவரை திருமணம் செய்தார். அவர்களின் திருமண நிகழ்ச்சியை ஜியோ டிவியைச்சேர்ந்த லோதி என்பவர் தொகுத்து வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியின் பின்னணியில் முஸ்லீம் மதத்தைச்சேர்ந்த ஒரு பாடல் ஒலிபரப்பப்பட்டதாம். இதையடுத்து, அவர்கள் இஸ்லாமின் புனிதத்தன்மையை கெடுத்து விட்டதாக சொல்லி அவர்கள் மீது ஒரு அமைப்பு கிரிமினல் குற்றம் சாட்டியதோடு, அவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடியுள்ளது.

இந்த சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, ஜியோ டி.வியைச்சேர்ந்தவர்கள் அதற்கு மன்னிப்பு கோரியுள்ளபோதும், நடிகை வீணா மாலிக்கும், அவரது கணவரும் எந்த ரியாக்சனும் இல்லாமல் இருக்கிறார்களாம். அதனால் அவர்களுக்கு கட்டாயம் மரணதண்டனை வழங்கியாக வேண்டும் என்று அங்குள்ள முஸ்லீம் அமைப்புகள் கொடி பிடித்துள்ளதாம்.