‘தனி ஒருவன்’ படத்தில் 2 ஹீரோ!

ஜெயம்’ ராஜா இயக்கத்தில் ‘ஜெயம்’ ரவி, நயன்தரா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தனி ஒருவன்’. தொடர்ந்து ரீமேக் படங்களையே கொடுத்து வந்த ராஜா ஒரு நேரடி தமிழ்ப் படத்தை இயக்குகிறார். இந்த படம் ஒரு ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது. ரவியும், நயன்தாராவும் காவல் துறை அதிகாரிகளாக நடித்து வருகிறார்கள். இந்த படத்தில் இன்னொரு ஹீரோவும் நடிக்கிறாராம்.

முன்னணி இளம் ஹீரோ ஒருவரைத்தான் இந்த படத்திற்காக ராஜா ஒப்பந்தம் செய்துள்ளாராம். அவருக்கும், ஜெயம் ரவிக்கும் இடையிலான மோதல்தான் படத்தின் கதையாம். அவர் யார் என்பதையும், அவருக்கு என்ன கதாபாத்திரம் என்பதையும் விரைவில் அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். ஏறக்குறைய 90களில் வெளிவந்த ‘அக்னி நட்சத்திரம்’ போன்று இரண்டு ஹீரோக்களுக்குமே முக்கியத்துவம் உள்ள படமாக இது இருக்கும் என்கிறார்.

அந்த இளம் ஹீரோ ஆர்யாதான் என கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள். ஆனால், தற்போது சில படங்களில் தனி ஹீரோவாக நடித்து வரும் ஆர்யா ‘புறம்போக்கு’ படத்தில் மூன்று ஹீரோக்களில் ஒருவராக நடிக்கிறார். இதற்கு முன் ‘ஆரம்பம்’ படத்தில் அஜித்துடனும் நடித்திருந்தார். அவர் மட்டும்தான் இன்றைய ஹீரோக்களில் யாருடனும் இணைந்து நடிக்கும் தாராள மனதுடன் இருக்கிறார், எனவே அவராகத்தான் இருக்கும் என்கிறார்கள். ஜெயம் ரவியும், ஆர்யாவும் நல்ல நண்பர்கள் என்பதும் அதற்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது. இருந்தாலும், இன்னும் சில நாட்களில் ‘தனி ஒருவன்’ படத்தைப் பற்றி தனி அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.