வாய்ப்புக்கள் இல்லாததால் மீண்டும் பிரேசில் செல்லும் மாடல் அழகி!

 

பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாடல் அழகி ஜிசலி மொன்டீரோ. இந்தியாவுக்கு மாடலிங் செய்ய வந்த இடத்தில் நடிகையானார். லவ் ஆஜ் லவ் படத்தில் அறிமுகமானார். அதன்பிறகு ஷாருக்கான் தயாரித்த ஆல்வேஸ் கபி கபி படத்தில் நடித்தார். அந்த படத்துக்கு பிறகு அவருக்கு பெரிய வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் இந்தி சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு பிரேசிலுக்கே திரும்பிச் செல்கிறார்,
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: மாடலாக இந்தியாவுக்கு வந்த எனக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது.

 

எனது இரண்டாவது படம் சரியாகப் போகவில்லை. அடுத்த வாய்ப்புகளும் அமையவில்லை. என்றாலும் மாடலிங்கை தொடர்ந்தேன். சினிமாவுக்கு ஆசைப்பட்டு வரவில்லை. அதனால் இப்போது சினிமாவில் இருந்து விடைபெறுகிறேன். தொடர்ந்து மாடலிங் செய்வேன். பிரேசிலுக்கு திரும்பிச் சென்று ஆர்க்கிடெக் படிக்கப்போகிறேன். இந்தியாவுக்கு மீண்டும் திரும்பி வருவேன். ஆனால் இனி ஒரு போதும் சினிமாவில் நடிக்க மாட்டேன். என்கிறார் ஜிசலி.